கோவையில் வெற்றி பெற கொலுசும், கரூர்க்காரர்கள்தான் காரணம் : திமுக பொறுப்பாளரின் பகீர் வாக்குமூலம்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2022, 7:26 pm

கோவை : நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் 9 மாத ஆட்சியின் சாதனையால் திமுக வெற்றிபெறவில்லை கரூர்காரர்கள் தயவாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கொலுசினாலும் செந்தில் பாலாஜியின் முறைகேட்டாலும் திமுக வெற்றிபெற்றது என்று திமுக கிழக்கு மாவட்ட பொருப்பாளர் சேனாதிபதி வாக்குமூலம் வீடியோ வைரலாகி வருகிறது.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாநகராட்சியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்களின் கூட்டம் கோவையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திமுக மகளிரணி துணை தலைவர் மீனாஜெயகுமார் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்தியை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் கடுமையாக சாடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது திமுக கிழக்குமாவட்ட பொருப்பாளர் சேனாதிபதி கோவை மாவட்டத்தில் திமுக முறைகேடுகளால்தான் வெற்றி பெற்றோம் என்று வாக்குமூலம் அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சேனாதிபதி பேசும்போது, நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 70 சதவிகிதம் அதிமுக வெற்றிபெறும் என்று உளவுத்துறை தகவல் அளித்த நிலையில் கரூர்காரர்களின் தயவாலும், அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கிய கொலுசாலும்தான் கோவை மாவட்டத்தில் திமுக வெற்றி பெற்றது.

மேலும் பல இடங்களில் இருந்தும் இந்த வார்டில் வெற்றிபெறுவது கடினம் என்று எனக்கு போன் வரும்போதெல்லாம் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் எடுத்துகூறி அந்த பகுதிக்கெள்ளாம் கரூர் ஆட்களை அதிகமாக அனுப்பிவைத்தார்.

மேலும் கொலுசகலையும் அனுப்பிவைத்து, தடுக்க வருபவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யவும் அமைச்சர் செந்தில் பாலாஜி உத்திரவிட்டார். அதனால் தான் கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சியின் திமுக கைப்பற்றியது.

அதற்கு நன்றிகடனாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமையின்கீழ் அவர்சொல்லும் வழியில் நாம் செயல்படவேண்டும் என்றும், கோவையில் சாதனை படைத்த கரூர்காரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொருப்பாளர் சேனாதிபதி வாக்குமூலம் அளித்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!