ஹோமியோபதி பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை

Author: kavin kumar
28 February 2022, 7:58 pm

மதுரை : திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் கடலூரை சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் 4-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது நண்பருடன் வசித்து வந்தார். மேலும் இவர் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக செயல்பட்டு வந்தார். கடந்த 3 தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் தனது அறையிலேயே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருடன் தங்கியிருந்த பயிற்சி மருத்துவரும், நண்பருமான கிருஷ்ணகிரியை சேர்ந்த ஹரிஹரன் நேற்று இரவு தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்குச் செல்ல மற்ற நண்பர்கள் ராம்பிரசாத்தை செல்போனில் அழைத்தபோது நீண்ட நேரமாக செல்போனை எடுக்காததால் ராம் பிரசாத்தின் அறைக்கே சென்று கதவை தட்டிப் பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ராம்பிரசாத் இருந்துள்ளார்.

இதையடுத்து அவரது நண்பர்கள் திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராம்பிரசாத்தின் உடலைப் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1534

    0

    0