வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த பைக் மாயம் : சிசிடிவி காட்சியில் சிக்கிய 2 பேர்…போலீசார் விசாரணை!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2022, 4:53 pm

கோவை : கோவையில் வீட்டின் அருகே நிறுத்தபட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற இரு வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ரங்கேகவுண்டர் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் விற்கும் கடை ஒன்றில் பணியாற்றி வருபவர் ரகுமான். நேற்று முன் தினம் இரவு, ராஜவீதி ஐந்து முக்கு பகுதியில் உள்ள கடை உரிமையாளரை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது அவர், தான் வந்த இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு அருகில் நிறுத்து விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனைத்தொடர்ந்து அருகில் இருந்த சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு வாலிபர்கள் தனது இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வெரைட்டி ஹால்ரோடு காவல்நிலையத்தில் ரகுமான் புகார் அளித்தன் பேரில் வழக்கு பதிவு செய்தபோலீசார் சிசிவிடி காட்சிகளை கொண்டு இரண்டு வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?