தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் பொய் வழக்குகளை போட்டு திசை திருப்பும் திமுக : புதுச்சேரி அதிமுக நிர்வாகி குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
1 March 2022, 6:46 pm

தமிழக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதால் அதிமுகவை அழிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது என புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது :- கூட்டாட்சி தத்துவத்தை பற்றி அடிக்கடி கூறும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த தனது கூட்டணி கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காமல் தற்போது கூட்டாச்சியை பற்றி பேசுவது அழகல்ல. உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும் என முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

ஆன்மீக பூமியான புதுச்சேரிக்கு சுற்றுலா என்ற பேரில் வரக்கூடியவர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை அரசு விதிக்கவேண்டும். புதுச்சேரியில் உள்ள ஆலயங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மேலும் இதனை ஒரு சட்டமாக புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், முன்னாள் தமிழக அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொய் வழக்கு போடுவதால் அதிமுகவை அழிக்கவும், முடியாது அடக்கவும் முடியாது, என அவர் தெரிவித்தார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?