‘3 மணிக்கு மெசேஜ் அனுப்பி 6 மணிக்கு வெளியேற சொல்றாங்க..உக்ரைனியர்கள் எங்கள ரயிலில் ஏற விடமாட்றாங்க’: திருச்சி மாணவனின் உருக்கமான வீடியோ!!

Author: Rajesh
3 March 2022, 5:01 pm

கார்கிவ்: கார்கிவ்வில் சிக்கித்தவிக்கும் திருச்சியை சேர்ந்த மாணவர் அங்குள்ள நிலைமையை வீடியோவாக பதிவிட்டு இங்கிருந்து வெளியேற உதவுமாறு உருக்கமாக பேசியுள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் வேணுகோபால் நகரைச் சேர்ந்தவர் கிப்சன் ஜோசப் செல்வராஜ். இவர் உக்ரைனில் உள்ள கீவ் நகரில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

https://vimeo.com/684191765

போர் நடந்து வரும் சூழலில், உக்ரேன் எல்லைக்கு வருவதற்காக சுமார் ஆறு கிலோமீட்டர் தண்டவாளத்தில் நடந்து கொண்டதாகவும், தற்போது மெட்ரோ ஸ்டேஷனில் பதுங்கி உள்ளதாகவும், இங்கு உணவு தண்ணீர் இன்றி தவித்து வருகிறோம் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் மாணவர் அவருடைய வீடியோ பதிவு தெரிவிக்கின்றார்.

மேலும், ரயிலில் வருவதற்கு முயன்றால் உக்ரைனை சேர்ந்தவர்கள் இந்தியர்களை ரயிலில் ஏற விடாமல் தடுப்பதாகவும் தங்களை இங்கிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உருக்கமாக கேட்டுள்ளார்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?