300க்கும் கீழ் குறைந்த பாதிப்பு… 3 மாவட்டங்களில் மட்டுமே சற்று அதிகம் : பாதிப்பு பதிவு செய்யாத மாவட்டங்கள் இத்தனையா?!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 8:55 pm

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று புதிதாக 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,010 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 778 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,08.373 ஆக அதிகரித்துள்ளது. .

இதில் அதிகபட்சமாக சென்னையில் 83 பேருக்கும், கோவையில் 43 பேருக்கும், செங்கல்பட்டில் 34 பேருக்கும், ஈரோட்டில் 7 பேருக்கும், திருப்பூரில் 9 பேருக்கும், சேலத்தில் 8 பேருக்கும், திருவள்ளூரில் 12 பேருக்கும், திருச்சியில் 10 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?