போர்க்களமாக மாறிய அன்னவாசல் பேரூராட்சி… பதவியை பிடிப்பதில் அதிமுக – திமுகவினரிடையே மோதல்… கல்வீசி தாக்குதல்.. போலீசார் தடியடி…!!

Author: Babu Lakshmanan
4 March 2022, 12:26 pm

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று நடந்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது. அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக 8 இடங்களிலும், திமுக 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக சார்பில் பொன்னம்மாளும், திமுக சார்பில் மதினா பேகமும் போட்டியிடுகிறார்கள்.

எனவே, திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அதிமுக கவுன்சிலர்களுக்கு மிரட்டல் வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதிமுக கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடனே வந்து கடந்த 2ம் தேதி அவர்கள் பதவியேற்றுவிட்டுச் சென்றனர்.

இந்த நிலையில், இன்று காலை 6.30 மணிக்கே அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி வளாகத்திற்குள் வந்து விட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் தற்போது பேரூராட்சி முன்பாக திமுக – அதிமுகவினர் திரண்டதால் பதற்றம் நீடித்தது.

திமுகவினர் போலீஸாரின் தடுப்புகளை தள்ளிக் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு போலீஸாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் திமுகவினர் கல்வீசி தாக்குதலும் நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் தடியடி நடத்தி வருகின்றனர். இதனால் அந்த இடமே ஒரே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1530

    0

    0