வேலூர் மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் சுஜாதா போட்டியின்றி தேர்வு : 10 வருடம் கட்சியில் இருந்தவருக்கு புதிய மகுடம்!!
Author: Udayachandran RadhaKrishnan4 March 2022, 2:32 pm
வேலூர் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மாநகர மகளிர் அணி அமைப்பாளராக உள்ள 31- வது வார்டில் வெற்றி பெற்ற சுஜாதா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணி 45 வார்டுகளில் வெற்றி பெற்றது. சுயேச்சையாக வெற்றி பெற்ற 6 பேரில் 6-வது வார்டு உறுப்பினர் சீனிவாசன் திமுகவில் இணைந்தார்.
இதனையடுத்து திமுக கூட்டணி 46 வார்டாக அதிகரித்தது. மீதமுள்ள வார்டுகளில் அதிமுக 7 ; சுயேச்சை 5 வெற்றி பெற்றுள்ளனர். 8- ஆவது வார்டில் போட்டியின்றி தேர்வான காட்பாடி தெற்கு பகுதி செயலாளர் சுனில்குமார் துணை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது.
மொத்தம் 46 வார்டுகளில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையோடு உள்ளதால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் உள்ளதால் வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 48 உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில். அதிமுக, சுயேச்சை உள்ளிட்ட 11 பேர் கலந்துகொள்ளவில்லை.
31 வது வார்டில் போட்டியிட்டு 3083 வாக்குகள் பெற்று 1366 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் MA.Bed படித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருப்பவர் தற்போது மாநகர மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார்.