இறந்த நாய்க்குட்டியை குழிதோண்டி அடக்கம் செய்த நாய்கள்: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பாசப்போராட்டம்..!!(வைரல் வீடியோ)

Author: Rajesh
4 March 2022, 5:01 pm

நாய்கள் மரணத்தை எப்படி சரியாக உணர்கிறது காலம் காலமாக தொடரும் புதிராக இருக்கிறது. இருப்பினும், மனிதர்களுக்கு நிகராக இன்னும் சொல்லப்போனால் மனிதர்களை விடவும் அன்பை காட்டுவதிலும், உணர்ச்சிகளை புரிந்து கொள்வதிலும் நாய்கள் ஒருபடி முன்னே நிற்கின்றன.

இந்நிலையில், ட்விட்டரில் பரவி வரும் வீடியோ ஒன்று காண்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில் நாய்கள் குழு ஒன்று இறந்த தங்களது நண்பரான நாய்க்கு உணர்ச்சிவசத்துடன் விடைபெறும் வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் பகிர்ந்துள்ள வீடியோவில், ஐந்து நாய்கள் இறந்த நாய் ஒன்றை புதைப்பதற்காக வாயால் குழி தோண்டி எடுப்பதைக் காட்டுகிறது. பின், இறந்த நாய் குழியில் கிடத்தப்பட்ட நிலையில், இறந்த நாயின் உடலை மூடுவதற்காக நாய்கள் தங்கள் வாயாலும், கால்களாலும் குழியை மண்ணை கொண்டு மூடுவது போல அந்த வீடியோ அமைந்துள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!