பேரூராட்சி தலைவர் தேர்வு செய்வதில் கூச்சல் குழப்பம் : நீண்ட இடைவெளிக்கு பின்னர் குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் வெற்றி!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2022, 9:47 pm

திருப்பூர் : அவிநாசி பேரூராட்சி தலைவர் தேர்ந்தெடுப்பதில் கடும் இழுபறிக்கு பின்னர் திமுகவை சேர்ந்த தலைமை அறிவித்த வேட்பாளர் வெற்றி பெற்றார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவினர் கோஷ்டி பூசலால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட திமுக தலைமை அறிவித்த வேட்பாளர், போட்டி திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளர் என மூன்று பேரும் தலா 6 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறையில் தேர்தல் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

திமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை தொட்டதால் தலைவர் தேர்தலில் திமுகவில் இரண்டு பேர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சம அளவில் தலா 6 -வாக்குகள் பெற்றனர். தலைவரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்தது.

இதையடுத்து குலுக்கல் முறையில் இருவரை தேர்ந்தெடுத்து பின் மீண்டும் வாக்குப் பதிவு முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்கலில் தி.மு.க. அதிகாரபூர்வ வேட்பாளர் தனலட்சுமி மற்றும் அ.தி.மு.க வேட்பாளர் சித்ரா என இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களின் வாக்குப்பதிவு நடந்தது. அதில் தி.மு.க. சேர்ந்த தலைட்சுமி 10 வாக்குகள் பெற்றும், அ.தி.மு.க வேட்பாளர் சித்ரா 8 வாக்குகள் பெற்றதால், அவிநாசி பேரூராட்சி தலைவராக தி.மு.க தனலட்சுமி வெற்றி பெற்றார்.

  • Vikram to play villain in Marco sequel வெயிட்டான வில்லன் ரோலில் விக்ரம்…மலையாள சினிமாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல இயக்குனர்..!
  • Views: - 1687

    0

    0