என்னை அதிமுகவில் இருந்த நீக்க அவர் ஒருவருக்குத்தான் அதிகாரம் இருக்கு : ஓ. ராஜா ஓபன் டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2022, 7:24 pm

தேனி : அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இணைந்த என்னை கட்சியை விட்டு நீக்கம் அதிகாரம் யாருக்கும் இல்லை என ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா கூறியுள்ளார்.

நேற்று சசிகலாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை அதிமுகவின் அனைத்து பொறுப்பில் இருந்தும் விடுவிப்பதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.ராஜா, நான் சசிகலாவை மனப்பூர்வமாக அதிமுகவின் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்கிறேன். ஆகையால் நான் எம்ஜிஆர் காலத்தில் கட்சியில் இணைந்த என்னை நீக்கும் அதிகாரம் ஓபிஎஸ், இபிஎஸ்கு இல்லை.

என்னை கட்சியை விட்டு நீக்கம் செய்யும் அதிகாரம் சின்னம்மா ஒருவருக்கு மட்டும்தான் உள்ளது. இது சம்பந்தமாக சின்னம்மா அவர்களிடம் நாங்கள் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்போம். நான் சின்னம்மாவை சந்தித்தது கழக உறுப்பினர் என்ற முறையில் சந்தித்தேன்.

ஓபிஎஸ் இடமும் ஈபிஎஸ் இடமும் நான் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒற்றைத் தலைமையில் சின்னம்மா தலைமையில் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுவே எனது விருப்பம். தமிழகத்தில் உள்ள அனைத்து தொண்டர்களின் விருப்பமும் இதுதான்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1379

    0

    0