17 வயது சிறுமியை கடத்தி கூட்டுப்பாலியல்? சக நண்பர்களுடன் சேர்ந்து ஆண் நண்பர் செய்த வெறிச்செயல் : மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!!.

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2022, 10:31 pm

மதுரை : மேலூர் அருகே தொடர் பள்ளி சிறுமிக்கு போதை ஊசி செலுத்தி கூட்டுப்பாலியலில் இளைஞர்கள் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் மற்றும் சபரி தம்பதியினர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில், இவர்களது பெண் குழந்தை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றார்.

இந்நிலையில், இதே ஊரை சேர்ந்த சுல்தான் என்பவருடைய 26 வயது மகனான நாகூர் அனிபாவுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன், சிறுமியை நாகூர் அனிபா கடத்தி சென்று தொடர் பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் தாய் சபரி அளித்த புகாரின் பேரில், மேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் அனீபாவை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பாலியல் தொந்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு நாகூர் ஹனிபா என்ற இளைஞருடன் காதல் வயப்பட்டதாகவும் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் சென்னையில் பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்த சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய இளைஞர் நண்பர்களுடன் சேர்ந்து போதை மருந்து கொடுத்து தொடர் பாலியல் இச்சைக்கு ஆளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பள்ளி சிறுமிகள், பெண்கள் மீது தொடர் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 2056

    1

    0