உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதே மத்திய அரசின் நோக்கம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!!

Author: Rajesh
6 March 2022, 1:29 pm

சென்னை: உக்ரைனில் சிக்கி தவிக்கும் ஒவ்வொரு மாணவரையும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சார்பில் நடைபெறும் மருத்துவ முகாமை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

உக்ரைனில் இருந்து மீட்பு தினந்தோறும் 4,000 மாணவர்கள் மீட்க்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாணவரையும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதே மத்திய அரசின் நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் பேர் இந்தியா வந்துள்ளனர்.

தமிழகம் அமைத்துள்ள குழு இதுவரை எத்தனை மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்டு வந்துள்ளது? என கேள்வி எழுப்பினார். மேலும் நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இணை அமைச்சர் எல்.முருகன் பதில் அளித்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில்,

எல்லாவற்றிற்கும் தகுதி தேர்வு என்பது ஒன்று உண்டு. அதன் அடிப்படையிலேயே நீட் தேர்வு உள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் வந்த பிறகு அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவம் படித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

  • AR Rahman Sons Defends his father against Rumours அப்பா குறித்து தப்பா பேசாதீங்க… ஏஆர் ரகுமான் மகன் போட்ட பதிவு!
  • Views: - 1131

    0

    0