ரசிகர்களின் பல நாள் ஆசையை நிறைவேற்றிய கீர்த்தி சுரேஷ்.. Latest video..!

Author: Rajesh
6 March 2022, 5:05 pm

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.  

இதனிடையே அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தல் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனை ரசிப்பதற்கென்றே ரசிகர்கள் பட்டாளமே காத்துக்கிடக்கிறது. இதனிடையே விஜய்யின் அரபிக் குத்து பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் பலரும் பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ போடுங்கள் என அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் கேட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது அவரது ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அரபிக்குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடி வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1731

    4

    3