மகளிர் தினம்: பெண் காவலர்களுடன் இணைந்து கொண்டாடிய கோவை காவல் ஆணையர்!!

Author: Rajesh
8 March 2022, 1:14 pm

கோவை: கோவையில் பெண் காவலர்களுடன் இணைந்து மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய காவல் ஆணையர், வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு பழச்சாறுகள் வழங்கினார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பெண்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை அண்ணா சிலை சிக்னல் பகுதியில் கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீகுமார் பெண் போலீசாருடன் இணைந்து கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடினார்.

தொடர்ந்து போலீசாருக்கு இனிப்புகளை வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும், தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள சூழலில், வெயிலில் நின்று பணி புரியும் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு, நீர்மோர் ஆகியவற்ற வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் துணை ஆணையர்கள் உமா, செந்தில்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!