மதம் மாறி திருமணம் செய்த பெண்: மாமனாரை கொலை செய்ய துப்பாக்கியுடன் கோவை வந்த கும்பல்…பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Rajesh
8 March 2022, 3:12 pm

கோவை: மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்ய வாட்ஸ் ஆப்பில் திட்டம் தீட்டிய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரது மகன் அருண்குமார் (28), ஹைதராபாத்தில் உள்ள தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார். இதனிடையே அருண்குமார் ஹைதராபாத்தில் பணியாற்றி போது, அங்கு தங்கியிருந்த திருவாரூரை சேர்ந்த சஹானா என்பவருடன் காதல் ஏற்பட்டது.

தொடர்ந்து அருண்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோவையில் வசித்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு இசுலாமியரான சஹானா இந்து மதப்படி மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சஹானாவின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள், அருணை இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி வலியுறுத்தி வந்துள்ளனர்.

இதற்கு குமரேசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சஹானாவின் உறவினர்கள் வைத்துள்ள வாட்ஸ் ஆப் குழுவில் இது தொடர்பாக விவாதித்து வந்துள்ளனர். அப்போது அவரது உறவினர்கள், குமரேசனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய திட்டம் தீட்டியதோடு, இது தொடர்பாக கல்கத்தாவை சேர்ந்த ஒரு நபரிடம் துப்பாக்கி வாங்க தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இந்த தகவல் அறிந்த தேசிய புலனாய்வு முகமை, இது தொடர்பாக கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஈரோடை சேர்ந்த முகமதி அலி ஜின்னா, திருச்சியை சேர்ந்த இம்ரான்கான், சதாம் உசேன், சென்னையை சேர்ந்த பக்ருதீன் மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ராம்வீர் அஜய் ஆகிய 5 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.

மேலும் துப்பாக்கி விற்பனையாளர்களுடன் இவர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுசதி, சாதி, மத, இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்னர். சஹானாவின் தாய் நூர்நிஷா திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணி நிர்வாகியாக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1701

    1

    0