கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு…யுவராஜுக்கு சாகும் வரை சிறை: மற்ற அனைவருக்குமே ஆயுள்…நீதியை நிலைநாட்டிய நீதிமன்றம்..!!

Author: Rajesh
8 March 2022, 4:25 pm

மதுரை: சேலத்தை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளிகள் உள்பட அனைவருக்குமே ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் கோகுல் ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் போவதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் கோகுல் ராஜூவை அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த கொடூர கொலையில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வழக்கில் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார். மேலும் 16 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். சாதி ஆணவப் படுகொலையான இச்சம்பவம் தமிழகத்தை அதிர வைத்தது. இந்நிலையில் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, இவ்வழக்கில் மொத்தமாக 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். நாமக்கல் கோர்ட்டில் 72 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி சம்பத்குமார் தெரிவித்தார். கடந்த 7 வருட காலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதாவது பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் கொடூர கொலை வழக்கில் யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம் செல்வகுமார், தங்கதுரை , சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித் போன்ற 10 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று மார்ச் 8ம் தேதி வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத் குமார் அறிவித்த தண்டனையில், யுவராஜ், யுவராஜின் கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

குமார், சதிஸ்குமார், ரகு,ரஞ்சித் செல்வராஜ் ஆகிய குற்றவாளிக்ளுக்கு 2 ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் 5வருட கடுங்காவல் தண்டனை மற்றும் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 1756

    0

    0