”எங்கே போனாலும் நானும் வருவேன் ” : மகன் இறந்த ஒரு சில மணி நேரத்தில் உயிரிழந்த தாய்.. மரணத்திலும் நெகிழ வைத்த தாய் – மகன் பாசம்!!
Author: Udayachandran RadhaKrishnan8 March 2022, 8:29 pm
திண்டுக்கல் : நத்தம் அருகே நேற்று மகன் இறந்த துக்கம் தாங்காமல் இன்று தாயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பண்ணியா மலையைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் சிவக்குமார் (வயது 40) கூலித் தொழிலாளி. இவருக்கு 4 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர்.
சிவகுமாருக்கு சில ஆண்டுகளாக இருதய நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சிவகுமாரின் இறுதி சடங்குகள் செய்வதற்காக அவரது உடல் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்தது.
மகனின் இறப்பு அவரது தாய் மருந்திஅம்மாளுக்கு தெரிய வரவே தனது மகன் இழந்ததை நினைத்து அழுது கொண்டிருந்த மருந்திஅம்மாள் இன்று அதிகாலை மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார்.
அருகில் உள்ளவர்கள் அவரை தூக்கிய போது அவரது உயிர் பிரிந்து விட்டது தெரிய வரவே அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். தற்பொழுது மகன் மற்றும் தாயின் ஆகிய இருவரின் உடல்களும் இறுதி சடங்கு செய்வதற்காக வீட்டின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மகன் இறந்த செய்தி கேட்ட தன்னுயிரையும் விட்ட தாயின் அன்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக மகளிர் தினத்தில் தனது மகன் இறந்த செய்தி கேட்டு தன்னுயிரை விட்ட அம்மாவின் பாசம் அப்பகுதியில் பெரும் வியப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது