கைவிரித்த பாக்.,…உதவிக்கரம் நீட்டிய இந்தியா: பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய பாகிஸ்தான் பெண்..!!

Author: Rajesh
9 March 2022, 5:01 pm

கீவ்: உக்ரைனில் இருந்து தன்னை பாதுகாப்பாக மீட்டதற்காக அந்நாட்டிற்கான இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரஷ்யா தாக்குதல் காரணமாக உக்ரைனில் தவித்து வந்த இந்திய மாணவர்களை ஆபரேசன் கங்கா திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. இதற்காக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது. 90% மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களையும் மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மாணவர்களுக்கு அழைத்து வரப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக பல உதவி மையங்கள் அமைக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகிறன்றனர். இந்திய மாணவர்களுடன் பல வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் உக்ரைனில் இருந்து மீட்கப்படுகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த அஸ்மா ஷபீக் என்ற பெண்ணும் கீவ் நகரில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார். இதற்காக இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், வணக்கம், என் பெயர் அஸ்மா ஷபீக். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். மிகவும் கடினமான சூழ்நிலையில் சிக்கித் தவித்த போது, எல்லா வழிகளிலும் ஆதரவளித்த உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியப் பிரதமருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களை ஆதரித்ததற்கு மிக்க நன்றி. இந்திய தூதரகத்தால் நாங்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் அந்த பெண் கூறியுள்ளார்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 1919

    0

    0