திம்பம் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2022, 6:06 pm
Dhimbam Inspection 1 - Updatenews360
Quick Share

ஈரோடு : திம்பம் மலைப்பாதை போக்குவரத்து நிறுத்தம் தொடர்பாக ஆளில்லா விமானம் மூலம் திம்பம் மலைப் பாதையில் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழகம் – கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் திண்டுக்கல் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

குறுகிய வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு நின்று விடுவதும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி தொடர்கதையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் இந்த சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. ஏராளமான வன விலங்குகள் உயிரிழப்பதால் உயர்நீதிமன்றம் இரவு நேர போக்குவரத்தை நிறுத்த உத்திரவிடப்பட்டது.

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி பண்ணாரி கோவில் முதல் திம்பம் மலை உச்சி வரை ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

திம்பம் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி ஆய்வு நடத்தப்படுவதாகவும், இதன் அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்து மலைப்பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தேசிய நெடுஞ்சாலை துறை திட்டம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிக்கை இரண்டு நாட்களில் தாக்கல் செய்யப்பட்டு அதன்படி நெடுஞ்சாலை துறையினர் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என முடிவு செய்ய உள்ளனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 1354

    0

    0