அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஜி.என்.மில்ஸ் மேம்பால பணிகள் விரைவில் நிறைவடையும் : தேசிய நெடுஞ்சாலைத்துறை தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2022, 7:15 pm
கோவை : அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி கோவை ஜி.என்.மில்ஸ் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதனை அடுத்து தற்போது ஜி.என். மில்ஸ் மேம்பால பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஜி.என்.மில்ஸ் மேம்பால பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்பம் மூலம் கான்கிரிட் போடும் பணி, பில்லர்கள் மேல் சாலை அமைக்கும் பணி போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.