மதுபாட்டில்களுக்கு கமிஷன்.. இடமாறுதலுக்கு லஞ்சம் : அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் போர்க்கொடி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2022, 12:34 pm

கோவை : டாஸ்மாக் நிறுவனத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தலையீட்டை தடுக்கவேண்டும், இல்லையேல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன் தமிழக அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு மதுபான கூடங்களை திறக்க மேல்முறையீடு செய்ததை கண்டித்து கோவையில் டாஸ்மார்க ஊழியர்கள் சம்மேளனத்தின் சார்பாக தமிழக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து சம்மேளன மாநில பொதுசெயலாளர் திருச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழியர்களின் பணி இட மாறுதலுக்கு பெருமளவில் பணம் வசூலித்து வருகிறார். மேலும் அமைச்சரின் சிபாரிசில் உள்ளவர்களுக்கு மட்டுமே பணி இடமாற்றம் கிடைக்கிறது. மற்றவர்களிடம் பெருமளவில் பணம் வசூல் நடக்கிறது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் மதுகூடங்களை அடைக்க நீதிமன்றம் உத்திரவிட்ட நிலையில் தமிழக அரசு நேல்முறையீடு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசு மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு ஆளும் கட்சியினர் கமிசன் கேட்டு மிரட்டுகின்றனர். கொரோனா காலத்தில் நோய்தடுப்பு நடவடிக்கையாக தடுப்புகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டதற்கான செலவுகளை அரசு தராமல் ஏமாற்றி வருகிறது.

மேலும் டாஸ்மாக் கடை நஷ்டத்தில் இயங்குவதாக பொய்யான ஒருதகவலை அரசு அளித்திருப்பதுடன், 1361 கோடி கடனில் டாஸ்மாக் கடனில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் திமுகவினரின் தலையீட்டை தடுக்க வேண்டும், வேலை நேரம் முடிந்த பிறகு, மதுபான கூடங்களை டெண்டர் எடுத்தவர்கள் பெட்டி,பெட்டியாக மதுபானம் கேட்டு மிரட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 1210

    0

    0