ஹீரோயிசம் எல்லாம் வேற எங்காவது காமி : வாகன ஓட்டியை நடுரோட்டில் அசிங்கப்படுத்திய காவலர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan11 March 2022, 11:30 am
ஆந்திரா : விதிகளை மீறிய வாகன ஓட்டியிடம் அபராதம் அல்லது வழக்குப்பதிவு செய்யாமல் சட்டையை பிடித்து தரதரவென காவல்நிலையத்திற்கு இழுத்து சென்ற போலீசாருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
போக்குவரத்து காவல் பணியில் இருக்கும் போலீசார் வாகன ஓட்டிகள் செய்யும் குற்றங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்பது விதி.
ஆனால் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மர்ரிபாடு அருகே முககவசம் அணியாமலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் ஸ்கூட்டர் ஓட்டி வந்த ஒரு வாலிபரை பிடித்த போலீஸ் எஸ்.ஐ ஒருவர் அபராதம் கட்ட கோரினார்.
தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் இப்போது கட்ட இயலாது. ஆன்லைன் மூலம் செலுத்துகிறேன் என்று அந்த வாலிபர் கூறியிருக்கிறார். ஆனால் என்னிடமே சட்டம் பேசுகிறாயா என்று அந்த எஸ்.ஐ, வாலிபரின் சட்டையை பிடித்து காவல்நிலையத்திற்கு இழுத்து சென்றார்.
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி சம்பந்தப்பட்ட எஸ்.ஐ க்கு பொது மக்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.