குளச்சலில் போட்டி திமுக உறுப்பினருக்கு ஆதரவு : காங்., எம்எல்ஏ பிரின்ஸின் கொடும்பாவியை எரிக்க திமுகவினர் முயற்சி..!!

Author: Babu Lakshmanan
11 March 2022, 4:33 pm

கன்னியாகுமரி : குளச்சல் நகராட்சியில் போட்டி திமுக உறுப்பினர் பதவியேற்க ஆதரவாக செயல்பட்ட குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏவின் கொடும்பாவியை திமுகவினர் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் நகராட்சியை திமுக மீனவ வேட்பாளரன ஜான்சன் சார்லஸ் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு திமுக போட்டி வேட்பாளர் நசீர் என்பவர் பாஜக மற்றும் அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற்றார். 24 வார்டுகள் உள்ள குளச்சல் நகராட்சியில் இருவரும் 12 வார்டுகள் வீதம் பெறவே, குலுக்கல் மூலம் நசீர் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

இந்த நிலையில், நசீர் தலைவரானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு ஆதரவாக செயல்பட்ட குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸை கண்டித்தும் குளச்சலில் மீனவ மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது எம்எல்ஏ பிரின்ஸின் கொடும்பாவியை எரித்து கடலில் வீச மீனவர்கள் முயன்றனர். இதனை போலீசார் தடுத்த நிலையில், அந்த பகுதியில் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!