Dress-அ வச்சு பொண்ணுங்கள எடை போடாதீங்க: சமந்தா..! பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்..!

Author: Rajesh
13 March 2022, 1:41 pm

ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு படு கவர்ச்சியான பச்சை நிற உடையணிந்து அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவரது உடையை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து தள்ள, மற்றொரு புறம் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் குவிய தொடங்கின.

ஆபாச கமெண்ட்டுகளும் நடிகை சமந்தாவை பற்றியும் அவர் அணிந்திருக்கும் உடையை பற்றியும் சமூக வலைதளங்களில் எழுந்தது. இந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில், பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் அனைவரும் நிறுத்த வேண்டும் என்றார்.

மேலும், பெண்களின் ஆடையை வைத்து அவர்களை தீர்மானிப்பது, 2022ல் இருக்கிறோம், இன்னமும், பெண்களை அவர்கள் அணியும் உடையை வைத்து இப்படி ஜட்ஜ் பண்ணுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களது ஆடை பற்றி யாருமே பேசக் கூடாது என்றும் சமந்தா கூறியுள்ளார். பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு சுய முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

பெண்களின் ஆடை குறித்து சமந்தா பேசியிருப்பதை அடுத்து, நெட்டிசன்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், ஆபாச வார்த்தைகள் அடங்கிய டி சர்ட்டை அணிந்து கொண்டு பெண்கள் வெளியே சுற்றுவது சரிதானா? என்றும் நெட்டிசன்கள் பதில் கேள்வி கேட்டு வருகின்றனர் . மேலும், அதே 2022ல் நடிகைகள் இப்படி கிளாமர் உடைகளை அணிந்து போஸ் கொடுத்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என ஏன் கருதுகின்றனர்? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!