வரலாற்றில் இமாலய சாதனை படைத்த ரொனால்டோ : ஹாட்ரிக் கோல் அடித்து அபாரம்.. பட்டியலில் பிடித்த இடம்!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2022, 2:29 pm

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர்ஸ் யூனைட்டட் (manchester united) அணிக்காக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார்.

இந்நிலையில்,டோட்டன்ஹம் (Tottenham) அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில்,ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து கால்பந்து வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதன்மூலம்,கிளப் போட்டிகள் உள்பட சர்வதேச கால்பந்து போட்டிகளில் இதுவரை 807 கோல்களை ரொனால்டோ அடித்து வரலாற்றில் முன்னணி கோல் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதுவரை கால்பந்து போட்டிகளில் 805 கோல்கள் அடித்திருந்த ஆஸ்திரிய-செக் முன்னாள் வீரர் ஜோசப் பிகானின் சாதனையை,ரொனால்டோ முறியடித்துள்ளார். புகழ்பெற்ற 25 ஆண்டுகால வாழ்க்கையில் விளையாடிய பிகான் 530 ஆட்டங்களில், பிகான் 805 கோல்களை அடித்தார்,அதில் 395 கோல்கள் ஸ்லாவியா ப்ராக் அணிக்காக 217 போட்டிகளில் அடிக்கப்பட்டன.இந்த நிலையில்,அவரது சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.

அதே சமயம்,மெஸ்ஸி 2003 இல் அறிமுகமானதில் இருந்து 961 போட்டிகளில் 759 கோல்களுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Rashmika Mandanna துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?