ஆரம்பிக்கலாங்களா…விக்ரம் படத்தின் மாஸான கிளிம்ப்ஸ்ஸை வெளியிட்ட கமல்: ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்..!!

Author: Rajesh
14 March 2022, 10:42 am

விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

மாஸ்டர் படத்துக்கு பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்தது. கோலிவுட்டில் அவருக்கு பயங்கர டிமாண்ட் ஆனது. இதையடுத்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார் லோகேஷ்.

கமலின் வெறித்தனமான ரசிகரான லோகேஷ் அவருடனே கூட்டணி அமைத்துள்ளதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது. விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று, இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

விக்ரம் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைஅடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1395

    3

    0