DVAC ரெய்டு…முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை: 6 மாவட்டங்களில் 58 இடங்களில் ரெய்டு..!!

Author: Rajesh
15 March 2022, 8:43 am

கோவை: கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணிக்குசொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லம் மற்றும் அதிமுகவினரின் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் இல்லம் உட்பட தமிழகத்தில் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி சென்னையில் 8 இடங்களிலும், கோவையில் 41 இடங்களிலும் சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கலில் 1 இடத்திலும், கிருஷ்ணகிரியில் 1 இடத்திலும், திருப்புத்தூரில் 2 இடம் உடபட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1223

    0

    0