பெரியார் படம் மீது ஆயில் ஊற்றி அவமதிப்பு : குமரியில் அதிர்ச்சி சம்பவம்… போலீஸார் விசாரணை

Author: Babu Lakshmanan
15 March 2022, 11:35 am

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே அரசுப் பள்ளி சுவரில் வரையப்பட்டிருந்த பெரியார் படத்தின் மீது ஆயில் ஊற்றிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளியின் வெளிப்புற சுவரில் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் உருவப்படம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. பெரியார் படத்தின் மீது மர்ம நபர்கள் ஆயில் பெயின்டை ஊற்றி அவமதித்துள்ளனர்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மதிவண்ணன் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த போலீஸார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 1632

    0

    0