‘அஜித்-62’ திரைப்படத்தை இயக்கப் போகும் பிரபல இயக்குனர்..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Author: Rajesh
15 March 2022, 4:43 pm

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து மூன்றாவது முறையாகவும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இந்நிலையில் தற்போது, அஜித் நடிப்பில் உருவாகயிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 62 வது படமாக உருவாகும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு தீபாவளியை படக்குழுவினர் டார்கெட் செய்வதாகும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1316

    0

    0