அடுத்த கல்யாணத்துக்கு ரெடி: 3 கண்டிஷன்களோடு 2வது மனைவியை தேர்ந்தெடுத்த பிரபல இசையமைப்பாளர்…வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!!
Author: Rajesh16 March 2022, 1:07 pm
இசையமைப்பாளர் டி.இமான் அண்மையில் தனது மனைவியை விவாகரத்து செய்திருந்தார். இந்நிலையில் தற்போது இமான் மறுமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. சென்னையை சேர்ந்த உமா என்பவருக்கும் இமானுக்கும் வரும் மே மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.
இது நிச்சயக்கப்பட்ட திருமணம் என்று கூறுகிறார்கள். இமான் வீட்டார் மற்றும் உமாவின் வீட்டார் இதுதொடர்பாக பேசி முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இது தொடர்பாக இமான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இமான் அளித்த பேட்டி ஒன்றில், விவாகரத்து மிகப்பெரிய விஷயம், யார் மீது வேண்டுமானாலும் குற்றம் இருக்கும். நான் என் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்க கூடாது என நினைத்தேன் ஆனால் அது நடந்துவிட்டது. இருப்பினும், எனது குழந்தைகளை என் மூச்சு இருக்கும் வரை விடமாட்டேன்.
எனது முன்னாள் மனைவி நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும், அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அவள் வாழட்டும் என கூறியுள்ளார். மேலும், இமான் தனது மறுமணம் குறித்து தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும்,
ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும்,
தன்னுடைய குழந்தைகளிடம் அன்புடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்றும் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளாராம்.