ஒரு தப்போட நிறுத்த மாட்டான் நீராவி முருகன்…. கைது நடவடிக்கை என்கவுன்ட்டர் வரைக்கும் போக இதுதான் காரணம் : போலீஸார் வெளியிட்ட பகீர் தகவல்..!!

Author: Babu Lakshmanan
16 March 2022, 1:20 pm

நெல்லை : பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை என்கவுண்ட்டர் செய்ய என்ன காரணம் என்பது குறித்து நெல்லை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த களக்காடு அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல்லில் தொடர்புடைய வழக்கு ஒன்றிற்காக கைது செய்த திண்டுக்கல் தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகனை, போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.

ரவுடி நீராவி முருகனை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கியதால், தற்காப்புக்காக என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் கூறியதாவது :- நீராவி முருகன் மீது கடத்தல் உள்பட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றுக்காக நீராவி முருகனை கைது செய்ய திண்டுக்கல் போலீசார் வந்துள்ளனர். அவனை கைது செய்ய பின்தொடர்ந்து சென்ற போது, காவல் ஆய்வாளர்கள் மீது அரிவாளால் தாக்கியுள்ளான். இதனால், தற்காப்புக்காக தங்களிடம் இருந்த கைத்துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளனர். இதில், அவன் இறந்துள்ளான். 4 போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.

நீராவி முருகன் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. குறிப்பாக, கடுமையான ஆயுதங்களைக் காட்டி பெண்களிடம் வழிப்பறி செய்வான். பெண்களை தொல்லையும் செய்துள்ளான். ஒரு தவறு செய்தால், அதோடு நிறுத்திக் கொள்ள மாட்டான். தொடர்ந்து 4,5 குற்றங்களை செய்வான், எனக் கூறினார்.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!