விவசாயிகளுக்கு கொலை மிரட்டல்.. நெல் கொள்முதல் நிலையத்தில் திமுக அராஜகம் : பரபரப்பு புகார்… கடையத்தில் பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2022, 5:13 pm

தென்காசி மாவட்டம் கடையத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக பிசான சாகுபடி விவசாயம் பயிர் செய்த நிலையில் அறுவடை பணி தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை வருடா வருடம் கடையத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் நேரடி கொள் முதல் நிலையத்தில் நெல்களை விற்பனை செய்து வருகின்றனர்.

ஆனால் இந்தாண்டு வழக்கமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்காமல், கடையம் அருகே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள கானாவூரில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இதையடுத்து விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரியிடமும், ஆட்சியரிடமும் சென்று முறையிட்டனர், இதையடுத்து மீண்டும் கடையத்தில் நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. இதையடுத்து நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நெல்களை கொண்டு வந்தனர்.

அப்போது திடீரென நிலையத்திற்கு வந்த திமுகவினர், அங்கிருந்த விவசாயிகளிடம் தகாத வார்த்தையில் பேசி மோதலில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட திமுக நிர்வாகி ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள், கடையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது : விவசாயிகள் நல்ல முறையில் நெற்களை போட்டுள்ளார்கள், தொழிலும் ஒழுங்காக நடைபெற்று வருகறிது. ஆனால் அடியாட்களோட வந்து அதிகாரிகளை மிரட்டி இங்கு நெல் கொண்டு வர கூடாது என சொல்ல அவன் யாரு?

அவன் ஒரு அரசியல்வாதி நாங்கு விவசாயி. நாங்க போராட்டம் பண்ணித்தான் இங்கு நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வந்துருக்கோம், இங்கேயே அறுவடை செய்து இங்கேயே விற்கத்தான் நாங்க இங்க குடோன கொண்டு வந்தோம்,ரொம்ப தூரம் கொண்டு போக எங்ககிட்ட எதுவும் இல்ல, நான் அறுப்பு அறுக்க வண்டி தேடி போயிருந்த நேரம் இங்க வந்து பிரச்சனை பண்ணிட்டாங்க.

ஒரு வண்டியில வந்து இந்த மாதிரி அராஜகம் பண்றாங்க, போலீஸ்காரர்களும் எங்கள பேச விடல, நீங்க உள்ள போனு சொல்றாங்க என மனமுருகி தங்களது வேதனையை கூறினர்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…