காய்கறி வியாபாரம் செய்யும் மூதாட்டியிடம் பணம், வெள்ளிக் கொலுசு அபேஸ் : பைக்கில் வந்த 3 புள்ளிங்கோ… வெளியான சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2022, 6:18 pm

திருப்பத்தூர் : வாணியம்பாடி பஜார் வீதியில் காய்கறி மூதாட்டியிடம் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி கொலுசு பறிப்பு.சிசி டிவி பதிவு காட்சிகள் அடிப்படையில் நகர போலீஸார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி வசந்தா. இவருக்கு பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர் வாணியம்பாடி பஜார் வீதியில் புளி மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தினமும் அதே பகுதியில் சாலையோரம் அமர்ந்து காய்கறி வியாபாராம் செய்து வந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், மூதாட்டி சுருக்குப் பையில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணமும் மற்றும் வெள்ளி கொலுசை பறித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்த முத்தாட்டி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து சிசி டிவி காட்சிகள் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…