கேரளாவில் 1000க்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு: 5 பேர் பலி…மாநில சுகாதாரத்துறை தகவல்..!!

Author: Rajesh
16 March 2022, 10:23 pm

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 966 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்து 24 ஆயிரத்து 66 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,444 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 48 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 536 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்து இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 45 உயிரிழப்புகள் தற்போது மறு கணக்கீட்டின் படி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1601

    0

    0