அழகு நிலையத்தில் மனைவியை தீவைத்து கொளுத்திய கணவன்… சிசிடிவி கேமிராவில் பதிவான அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
17 March 2022, 7:11 pm

புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் ஒட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ் – அழகு மீனா தம்பதியினர். இதில் இரண்டு பேரும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழுந்தை உள்ளது. இதில் அழகு மீனா நகர பகுதியான சின்ன மணி கூண்டு அருகே உள்ள ஒரு அழுகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கணேஷ் பெயிண்டராக உள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் அழகு மீனா பணி புரியும் அழகு நிலையத்திற்கு சென்ற கணேஷ், மீனா மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார். இதில் வலியால் மீனா அலறிய உடன் கணேஷ் அங்கிருந்து தப்பி சென்றுவீட்டார். தொடர்ந்து அருகே இருந்தவர்கள் கை, முகம் மற்றும் தோளில் தீக்காயம் ஏற்பட்ட மீனாவை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து ஒதியஞ்சாலை போலிசார் வழக்கு பதிவு செய்து மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த கணவர் கணஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1534

    0

    0