பூரி ஏன் சூடா இல்ல… ஓட்டல் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கிய போதை ஆசாமி.. ஓட்டல் சப்ளையர்களே உஷார்…!!
Author: Babu Lakshmanan17 March 2022, 10:28 pm
சூடா பூரி கேட்டு ஓட்டல் ஊழியரை குடிகார போதை ஆசாமி ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நேதாஜிசவுக் பகுதியில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான ரேணுகா என்ற உணவகம் உள்ளது
இந்நிலையில் இன்று காலை நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் குடிபோதையில் தனியார் ஓட்டலில் காலை உணவு சாப்பிட வந்துள்ளார். அப்போது, ஓட்டல் ஊழியரிடம் பூரி ஆர்டர் செய்துள்ளார். மேலும், சூடாகவும், விரைவாகவும் பூரிகேட்டு ஓட்டல் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஹோட்டல் ஊழியர் தனசேகருக்கும், குடிபோதையில் வந்த சந்திரசேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும். போதை ஆசாமியை ஹோட்டலில் இருந்து வெளியே அனுப்பி நிலையில், மீண்டும் ஹோட்டலுக்கு வந்த சந்திரசேகர், கையில் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலுடன் ஹோட்டல் ஊழியர் தனசேகர் தலைமீது அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது
தகவலறிந்து வந்த குடியாத்தம் போலீசார் தனசேகரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்து,
குடிபோதையில் தகராறு செய்த போதை ஆசாமி சந்திரசேகரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்