மிருகம் ஆதி, நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணமா ?

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2022, 12:00 pm

தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக நிக்கி கல்ராணி வருகிறார். மேலும்,நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. கடந்த வாரத்தில் இவரைப் பற்றிய தகவல் ஒன்று இணையதளத்தில் உலவிக் கொண்டிருந்தது.

அதாவது நிக்கி கல்ராணிக்கு சீக்கிரமே ஒரு தொழிலதிபருடன் திருமணம் ஆக போவதாகவும் அதற்கு நீக்கியும் சம்மதம் தெரிவித்ததாகவும் சில தகவல்கள் உலாவிக் கொண்டிருந்தன தற்போது என்ன என்று பார்த்தால் விஷயமே வேற.

பிரபல தமிழ் பட நடிகர் ஈரம் ஆதியும் நிக்கி கல்ராணியும் காதலிக்கிறார்கள் என்று இணையதளத்தில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. இதனுடைய ஆணி வேர் என்ன என்று பார்த்தால், 2 வருடங்களுக்கு முன் ஆதியின் அப்பா பிறந்தநாளுக்கு நிக்கி கல்ராணி விசிட் அடித்துள்ளார்.

சாதாரண நட்பு என்றால் ஆதியுடைய பிறந்தநாளுக்கு செல்வது வாஸ்தவம். ஆதியின் அப்பாவின் பிறந்த நாளுக்கு நிக்கி ஏன் செல்ல வேண்டும் என்று நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது. காலப்போக்கில் அதை மறந்து விட்டார்கள்.

தற்போது இவர்களின் காதல் திருமணம் வரை சென்று இருக்கிறது. விரைவில் இது குறித்து ஆதி,நிக்கி இருவரும் நினைந்து அதிகாரப்பூர்வமாக திருமணத்தைப் பற்றி கூறுவார்கள் என்பது கூடுதல் தகவல்.

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 1533

    0

    0