பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பு குறித்து தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம் : கோவையில் உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2022, 1:40 pm

கோவை : பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பு குறித்து தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம் என்று அவினாசிலிங்கம் பல்கலை., பட்டமளிப்பு விழா வில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.

வடகோவை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில், 33 வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினா கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில் அனைத்து துறைசார்ந்த 85 மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கபட்டது. 72 மாணவியர்களுக்கு, பி ஹெச்டி முனைவர் பட்டங்களும், 22 மாணவிகளுக்கு எம்.பில், ஆய்வியல் நிறைஞர் என்ற பட்டமும் வழங்கபட்டது. 46 மாணவிகளுக்கு முதுநிலை பட்டமும், 2047 மாணவிகளுக்கு இளநிலைப் பட்டமும் வழங்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினா பேசியதாவது: நான் கோவை வந்ததற்கு பெருமைப்படுகிறேன். தமிழக வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுவது கோவை மாவட்டம்.

நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு கல்வி மிகவும் அவசியமாக உள்ளது. பெண்களுக்கென இருக்கும் பல்கலைக்கழகங்கள் சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளன. ஒரே இடத்தில் பல பெண்கள் பட்டம் வாங்குவதை பர்ப்பதற்கு பெருமையாக உள்ளது.

கல்வியால் மட்டுமே நம் சமூகம் வளர்கிறது. முந்தய காலகட்டத்தில் தாய் தந்தை தான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் இப்பொழுது கல்வியால் குழந்தைகளை தாய் தந்தையருக்கு சொல்லிக்கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

பெண்களை மதிக்க வேண்டும் என்று ஆண்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பு குறித்து தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அவினாசிலிங்கம் பல்கலையின் வேந்தர் தியாகராஜன், நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், பதிவாளர் முனைவர் கெளசல்யா, மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவர்கள் கொண்டனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 1219

    0

    0