10 வயது சிறுமியிடம் சில்மிஷம்…103 வயது ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
Author: Rajesh19 March 2022, 2:04 pm
திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 103 வயதைக் கடந்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார்,
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீலை 9ம் தேதி அவரது வீட்டில் வாடகை வசித்து வந்த தம்பதியினரின் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது மகளை சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
அதன் பிறகு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பெற்றோர்கள் இது தொடர்பாக ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மீது புகார் அளித்திருந்த நிலையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்திருந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அவர் மீதான வழக்கு விசாரணையில் இன்றைய தினம் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும் மற்றும் ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 103 வயதைக் கடந்த ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டிருப்பது சிறுமிகள் மீதான குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு இத்தீர்ப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.