Blue Sattai மாறன் – அஜித் ரசிகர்கள் மோதல்… காரணம் என்ன..? Blue Sattai மாறனுக்கு ஆதரவாக செயல்படும் பிரபல இயக்குனர்.?
Author: Rajesh19 March 2022, 4:49 pm
ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும், ‘ப்ளூ சட்டை’ மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். அதேசமயம், படம் எடுக்கும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து தனது பாணியில் அதிரடியாக ‘ப்ளூ சட்டை’ மாறன் சொல்லும் விமர்சனம் சினிமா துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும். அதிலும் அஜித் படங்கள் குறித்து தெரிவிக்கும் விமர்சனங்கள் பெரும் விவாத பொருளாக மாறிவிடும்.. இதனிடையே, அஜித் நடித்த விவேகத்தை தனது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அஜித்தை படு மோசமாக விமர்சித்தார் புளுசட்டை மாறன். இந்த அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகினரிடமும் மிகுந்த கொதிப்பை ஏற்படுத்தியது.
இந்த விமர்சனம் குறித்து, புளுசட்டை மாறனிடம் போன் செய்து அமையதியான முறையில் பேசிய ரசிகரிடம், அஜித்தை அவன், இவன் என ஏக வசனத்தில் பேசியதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. விவேகம் விமர்சனத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் 2019, ஆகஸ்ட் 8ம் தேதி தல யின் நேர்கொண்ட பார்வை வெளியானது. பாண்டா பிரசாந்த் போன்றோர் நல்லவிதமாக விமர்சிக்க, புழு சட்டை மட்டும் வழக்கம் போல் தல அஜித் குமாரை கலாய்த்து விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து அஜித் குமாரின் விஸ்வாசம் திரைப்படத்தையும் மிகவும் கேவலமாக விமர்சனம் செய்தார். இதனால் இந்த ஒட்டு மொத்த விமர்சனமும் அஜித் ரசிகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன், விளைவாக அந்த விமர்சனம் அஜித் ரசிகர்களால் அதிகம் Dislike செய்யப்பட்டு வருகிறது. யூடூப் கமெண்ட்களும் கொஞ்சம் காரசாரமாக, ப்ளூ சட்டையை எச்சரிக்கை செய்யும் விதமாகவே இருக்கும்.
குறைசொல்வது சுலபம் ஆனால் படம் பண்ணுவது கடினம் என்று விமர்சனகள் எழுந்தன. அந்த விமர்சகர்களுக்கு சவால் விடும் படமாக ‘ப்ளூ சட்டை’ மாறனின் ஆன்டி இந்தியன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இருப்பினும் பாரதிராஜா உள்பட பல மூத்த இயக்குனர்கள் ஆன்டி இந்தியன் படம் பார்த்து ‘நீ சாதிச்சுட்டடா… எங்களை விமர்சிக்க உனக்கு தகுதி இருக்குடா’ என்று புகழ்ந்திருந்தனர். இதை ஆயுதமாக எடுத்து கொண்ட ‘ப்ளூ சட்டை’தங்போது நடிகர்களை விமர்ச்சிப்பதில் எல்லை மீறி வருகிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில், வலிமை திரைப்படம் திரையங்குகளில் வெளியானது. இந்தப்படத்தில், அஜித் முகத்தில் தொப்பை விழுந்திருக்கிறது, டான்ஸ் ஆடுவது மாவு பிசைவது போல இருக்கிறது இந்த டான்ஸை தியேட்டரில் சிரிக்காமல் பார்த்தவர்கள் யார்? என்றெல்லாம் ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் ட்ரோல் செய்து இருந்தார். இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் படம் நிகழ்ச்சி மேடையில் மேடையில் கடுமையான வார்த்தைகளால் புளுசட்டை மாறனை விமர்சித்தார். ‘சினிமா சினிமா காரங்களே கொல்லாதீங்க. எவ்வளவோ பேர் அழகா படம் ரிவியூ பண்றாங்க என்றார். மேலும்இ தொடர்ந்து சினிமாவை கிண்டலாக விமர்சனம் செய்து வரும் புளுசட்டை மாறனை விமர்சனம் செய்யும் வகையில், ஒரு மனசனோட உடல பத்தியோ கலர பத்தியோ விமர்சிக்க இங்க எவனுக்கு துப்பு இல்ல என்றார். தொடர்ந்து பேசிய அவர், நீ யாருடா வெண்ண சொல்றதுக்கு என்று கடுமையான வார்த்தையால் திட்டியுள்ளார்.
தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் ஆன ஜான் கொக்கன், ஆரி, இயக்குனர் பாண்டியராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும், தொடர்ந்து அஜித்துக்கு எதிரான பதிவுகளை ப்ளூ சட்டை மாறன் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களைப்பதிவிட்டு வருகிறார். இது வரையில் ட்டுவிட்டரில் விஜய் – அஜித் ரசிகர் சண்டை போட்டு வந்த நிலையில், விஜய் ரசி கர்களும், அஜித் ரசிகர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் ஒன்றிணைந்து ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர். ஏனென்றால், அடுத்து வரும் பீஸ்ட் படத்துக்கும் இதே வேலையைத் தான் இவர் செய்வார் இவருக்கு விஜய் ரசிகர்கள் யாரும் சப்போர்ட் பண்ணாதீங்க என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில், ப்ளூ சட்டை மாறன் தான் இயக்கி நடித்த ‘ஆன்டி இந்தியன்’ படத்திற்கு விகடன் விமர்சனத்தில் 44 மதிப்பேன் கொடுக்கப்பட்டது, ஆனால் வலிமை படத்திற்கு 40 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆரம்பம் படத்திற்கு விகடன் 43, பில்லா படத்திற்கு 40,வேதளத்திற்கு 40, அசல் படத்திற்கு 39 என ஆன்டி இந்தியன் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண்னை ஒப்பிட்ட அஜித் ரசிகர்களை கேலி செய்து இருந்தார். புளுசட்டை மாறன்.
இந்நிலையில் நேற்று முதல் ப்ளூ சட்டை மாறனை யாரோ திரையரங்கில் வைத்து அடித்து விட்டனர் என்று செய்தி வெளியானது. அவர் திரையரங்கில் இருப்பது போன்று புகைப்படங்களும் வெளியானது. தற்போது இது முற்றிலும் பொய்யான தகவல் என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்டுவிட்டர் பக்கத்தில் ‘தியேட்டர்னா நாலு பேர் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான? இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ…வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.
சினிமா இருப்பதால் தான் நீங்களும் இருக்கிறீர்கள் குறைகளை சுட்டிக் காட்டுவது எந்த அளவு தேவையோ அதே அளவு பெரியவை மரியாதையாக பேசுவது. சினிமாவில் உழைப்பவர்கள் பலரும் தங்கள் ஈடுபாட்டை அர்ப்பணிப்பை கொடுத்துதான் உழைக்கிறார்கள் பெரிய பெரிய இயக்குனர்கள், நடிகர்கள், என அவர் அவர்கள் தங்களை இந்த அடையாளங்களில் நிலைநிறுத்த போராடி கொண்டு இருக்கிறார்கள். நீங்களும் ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளீர்கள் அதன் வலி வேதனை என்னவென்று உங்களுக்குப் புரியும் இதுவரை நீங்கள் மோசமாக, கேவலமாக பேசிய விமர்சனங்கள் தான் அதிகம் இருக்கின்றன அது ஒரு பெரிய விஷயம் அல்ல யார் வேண்டுமானாலும் கேவலமாக பேசலாம். உங்கள் வார்த்தைகளால், மட்டமான சினிமா என்று சொல்லாமல் விமர்சனத்தையே மட்டமானது என்று ஆகிவிடும் போல. நீங்கள் என்ன வேணா பண்ணுங்கஇ உங்களுக்கு பிடித்ததை பண்ணுங்க ஆனா அடுத்தவனை மிதிச்சி முன்னேறவேண்டும் என நினைக்காதீங்க…