மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஊழியர் சடலமாக மீட்பு: கோவில் இணை ஆணையரின் கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை..!!

Author: Rajesh
20 March 2022, 12:13 pm

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இணை ஆணையரின் கார் ஓட்டுநர் அந்த கோயில் திருமண மண்டபத்தில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இணை ஆணையராக பணியாற்றி வருபவர் காவேரி. இவருக்கு கார் ஓட்டுநராக ஜெயச்சந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் வி.என். நகரில் உள்ளது. அங்கு நேற்று இரவு ஜெயச்சந்திரன் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக கிடந்துள்ளார். அப்போது அங்கு அருகே இருந்த சக ஊழியர்கள் மற்றும் ஜெயச்சந்திரன் மனைவியும் சேர்ந்து ஜெயச்சந்திரனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயச்சந்திரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது. இதன் பிறகு மயிலாப்பூர் போலீசார் தற்கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ஜெயச்சந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…