நடராஜனின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் : நினைவிடத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய சசிகலா!!
Author: Udayachandran RadhaKrishnan20 March 2022, 12:55 pm
தஞ்சை : சசிகலாவின் கணவரும் புதிய பார்வை முன்னாள் ஆசிரியருமான நடராஜன் 4 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா ஓ.ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் விளார் அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள ம. நடராஜனின் நினைவிடத்தில் இன்று காலை 6 மணிக்கு சசிகலா தீபம் ஏற்றி மலர் தூவி கணவர் புகைப்படத்திற்கு ஏலக்காய் மாலை அணிவித்து கோ பூஜை செய்தார்.
அவருடன் அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ஓ. ராஜா மற்றும் நடிகை சி.ஆர். சரஸ்வதி, முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.