குறையும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்…கோவையில் குடிநீர் தடுப்பாடு ஏற்பட வாய்ப்பு?: மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
Author: Rajesh20 March 2022, 2:48 pm
கோவை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த கேரளா, இதனால் கோவையில் சிறுவானி அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும், கோவையில் குடிநீர் தடுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவானி அணையில் பாதுகாப்பு காரணத்தை கூறி அணை முழு கொள்ளளவை அடைய கேரளா நீர்பாசனதுறை அனுமதி வழங்கவில்லை என்றும், குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறுவானி அணையில் இருந்து அதிகப்படியான நிரை ஆற்றில் திறந்துவிட்டு அணையின் நீர் மட்டத்தை வெகுவாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரளா முதல்வர் பினராய் விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியதாகவும், இருந்தாலும் கேரளா அரசு அதை பொருட்படுத்தாமல் அணையின் நீர்மட்டத்தை குறைத்ததால் சிறுவானி அணையில் இருந்து குகைவழிபாதை வழியாக நாளொன்றுக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் குடிநீர் விநியோக திட்டத்தை இயக்கி பராமரித்து வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நாளொன்றுக்கு வழங்க வேண்டிய குடிநீர் அளவு 90 மில்லியன் லிட்டருக்கு பதிலாக 60 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுவானி குடிநீர் வினியோக பகுதிகளில் குடிநீர் வினியோக நாட்கள் இடைவெளி அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழக அரசுடன் இனக்கமாக உள்ள அண்டை மாநிலமான கேரளாவில் இருந்துகூட கோவை மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரைகூட கேட்டுபெற முடியாத பலவீனமான அரசாகவும், மக்கள் நலனில் அக்கரை இல்லாத அரசாகவும் விளங்குகிறது என்பதை இதன்மூலம் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதுபோல் இந்த செய்தி அறிக்கை அமைந்துள்ளது.
மேலும் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரின் கொள்ளளவை குறையாமல் பார்த்துகொண்டதுடன் அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை மீட்டெடுத்தது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகத்தின் உரிமையை தற்பொதய அரசு விட்டுகொடுத்ததுடன் மட்டுமல்லாமல் முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தமுடியாமல் திணறி வருவதும் குறிப்பிடத்தக்கது.