இந்தியில் அடுத்த படத்திற்கு தயாரான நயன்தாரா..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Author: Rajesh
20 March 2022, 7:57 pm

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இதனிடையே அஜித்துடன் நடிக்கும் படம் குறித்தும் அறிவிப்பு வெளியானது.

மேலும், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார் நயன்தாரா. இதுமட்மின்றி காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், காட் பாதர் ஆகிய படங்களிலும் நடிகை நயன்தாரா நடித்து முடித்து விட்டார்.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் முன்னிணி நடிகரான சல்மான்கானுடனும் இணைந்த நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சல்மான் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில், கதாநாயகி நடிக்க நயன்தாரா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்’படுகிறது.

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 1783

    1

    0