‘கள்ளச்சாராயத்தை ஒழிப்பதே முதல் குறிக்கோள்’: விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!
Author: Rajesh21 March 2022, 12:50 pm
கோவை: கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கள்ளச்சாராயம் மற்றும் தீமைகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். கங்கை கருங்குயில் குழுவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், நாடகம் மூலம் கள்ளச்சாரம் மற்றும் மதுபானத்தின் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அதே போன்று கதிரவன் கலைக்குழுவினர் எமதர்மன் சித்திரகுப்தன் வேடமணிந்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.மேலும் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களால் ஏற்படும் தீமைகளான “நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மாரடைப்பு, நரம்பு தளர்ச்சி, மலட்டுதன்மை, குடும்ப தகராறு, அவப்பெயர் ஏற்படுதல்” போன்றவை குறித்து விழிப்புணர்வு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
இந்த கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் கண்டு களித்தனர்.