வீட்டுமனை பட்டா தர மறுப்பதாக புகார் : அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நரிக்குறவர் இன மக்கள்…!!!
Author: Babu Lakshmanan21 March 2022, 2:04 pm
திருவள்ளூர் : கும்முடிபூண்டி பேரூராட்சியில் கடந்த 30 ஆண்டு காலமாக வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா அடிப்படை வசதிகளை செய்து தராததால் பேரூராட்சியை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 11 வார்டு மேட்டுதெரு பகுதியில் 28 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டு மனை பட்டா சாலை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :- மழை வெள்ள காலங்களில் வீடுகளில் வசிக்க முடியவில்லை. மழைநீர் பாம்பு பூச்சி விஷ ஜந்துக்கள் அதிகம் உள்ளது. எனவே, தங்களை பாதுகாப்பாக வாழ வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து பல ஆண்டுகளாக வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை மனு அளித்தும் தீர்வு காணப்படவில்லை, எனக் கூறினர்.
பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா ஆகியோருடன் உரிய தீர்வு காண்பதாக காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உறுதி அளித்தும் அவர்கள் கலைந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறிய உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.