கலைக்கப்படும் மதிமுக.. திமுகவுடன் இணைக்கத் திட்டம்..? மா.செ.க்களின் முடிவால் விழிபிதுங்கி நிற்கும் வைகோ…!!

Author: Babu Lakshmanan
21 March 2022, 2:52 pm

வைகோவின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசியல் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவராக இருப்பவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இவர் திமுகவில் இருந்த போது, வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியில் இருந்து விலகி, மதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார். தனிக்கட்சி தொடங்கி திமுக மற்றும் அதிமுக என மாறிமாறி கூட்டணியை வைத்து எப்படியும், ஆளும் அரசில் இவரது கட்சி அங்கம் வகித்து விடும்.

Vaiko Condemned -Updatenews360

ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் உள்ளிட்டவைக்கு எதிரான வைகோவின் போராட்டம் சிறப்பு வாய்ந்ததாகும். இப்படியிருக்கையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் வைகோ, அரசியல் நடவடிக்கைகளில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. மேலும், அடுத்தடுத்த தேர்தல்களில் மதிமுகவுக்கு ஆதரவு குறைந்து வருவதால், தலைமை வலுவாகவும், துடிப்பாகவும் இருக்க வேண்டும் என்று கட்சியின் ஒரு சில தலைவர்கள் கூறியுள்ளனர். இதற்காக, வைகோவின் மகன் துரை வையாபுரியை கட்சியின் முக்கிய பொறுப்பில் அமரச் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தனர்.

திமுகவில் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, மகனை கட்சிக்குள் கொண்டுவருவதை ஆரம்பத்தில் விரும்பாதவராகவே தன்னைக் காட்டிக் கொண்டார். பின்னர், தனது மகனை கட்சியின் தலைமை செயலாளராக நியமித்தார். இதனை மதிமுகவினர் வரவேற்றாலும், அக்கட்சியின் ஒரு தரப்பினருக்கு பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியதாகவே அமைந்துள்ளது.

Durai Vaiko- Updatenews360

வைகோவின் இந்த செயலுக்கு இதுவரை வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், பேசாமல் மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்ற முடிவை அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் எடுத்துள்ளனர். இதற்காக, சிவகங்கையில் மதிமுக மாவட்ட செயலாளர் செவ்வந்தியப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வைகோ மீதான அதிருப்தியாளர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது ;- மதிமுக தொடங்கும் போது இருந்த இருந்த இளைய தலைமுறையினரை ஈழத்தையே பெற்றுத் தருவது போல பேசி, அந்த இயக்கத்திற்கு கொண்டு சென்றவர். எந்த அடிப்படை வேலைகளையும் செய்யாமல், ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே தொலைத்திருக்கிறார்.

Vaiko Stalin- Updatenews360

30 ஆண்டுகாலம் கட்சிக்கு உழைத்து மிசாவில் இருந்து தியாகம் செய்த இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையே குறை சொல்லி பேசிய அவர், எந்த தியாகமும் செய்யாத, எந்த உழைப்பையும் தராத தன்னுடைய மகன் துரை வைகோவை அவசர அவசரமாக கட்சியில் கொண்டு வந்துள்ளார். அதில் இந்த கட்சியில் இருக்கக்கூடிய மூத்த உறுப்பினர்களுக்கு உடன்பாடில்லை.

இதைப் பேசி முடிக்க அவரும் தயாராக இல்லை. திரைமறைவிலேயே, அந்தத் தம்பி திமுகவுடன் மதிமுகவை இணைக்க பேரம் பேசுவதாகக் கேள்விபட்டுள்ளோம். இப்படியோரு ஆபத்து நடப்பதற்கு முன்னரே, திராவிட கழகத்தின் நலனுக்காக, மதிமுகவை, திமுகவுடன் இணைத்து விட வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லவும், எங்களைப் போல வேறு யாரும் ஏமாறாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

காலத்தில் நாங்க கட்சியை நடத்திய போது, எந்த ஒத்துழைப்பும் தராமல் இருந்தவர்கள், இப்போது கூலிகளாக வந்து விட்டு சென்றுள்ளனர், என தெரிவித்துள்ளனர்.

அன்று திமுக தலைவர்களான கருணாநிதி, ஸ்டாலினுக்கு வந்த பிரச்சனை, தற்போது வைகோவுக்கு முளைத்துள்ளது. துரை வைகோவால் மதிமுகவினர் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்புவார்களா..? அல்லது கட்சி நலனுக்காக, மகனை நீக்கி வைகோ அதிரடி நடவடிக்கை எடுப்பாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 1465

    0

    0