பழம்பெரும் நடிகர் அசோகனின் மகன் யார் தெரியுமா..? அட இவரும் பிரபல வில்லன் நடிகரா…? அஜித், விஜய் படத்தில் மாஸ் காட்டியிருப்பாரே…!!
Author: Babu Lakshmanan22 March 2022, 2:51 pm
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் அசோகன். வில்லன் கெட்டப்பையும் ஹரோ ரேஞ்சுக்கு செய்வதில் வல்லவர். திருச்சியில் பிறந்த இவரது உண்மையான பெயர் ஆண்டனி. திரையுலகிற்காக தனது பெயரை அசோகன் என மாற்றிக் கொண்டார்.
இவரும் பிற நடிகர்களைப் போல மேடை நாடகத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய அசோகன், நடிப்பதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று பல போட்டிகளிலும் கலந்து கொள்வார். இளங்கலை பட்டதாரியான அசோகன், அவ்வையார் என்ற தமிழ் திரைப்படத்தின் முலம் தான் அறிமுகமானார். பின்னர், தனது நடிப்பால், முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்டோருக்கு பொருத்தமான வில்லனாக நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தார்.
1960 முதல் 70 காலகட்டங்களில் மட்டும் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிறகு மேரி ஞானம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். அதில் ஒருவர்தான் வின்சென்ட் அசோகன். இவரும் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், இவர் நடிகர் அசோகனின் மகன் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
தனது அப்பாவைப் போல நடிகர் வின்சென்ட் அசோகனும் பிரபல வில்லனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் சரத்குமார் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளிவந்த ஏய் என்ற திரைப்படத்தின் மூலம் தான் வின்சென்ட் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். போக்கிரி, ஆழ்வார், யோகி, வேலாயுதம், தலைவன், வடசென்னை ஆகிய முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் வின்சென்ட் அசோகன் அவர்கள் ஒரு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன் தந்தை குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். தனது தந்தையின் ஆசைப்படி படிப்பு முடித்துவிட்டு தான் சினிமாவிற்குள் நுழைந்தேன் என்று அவர் கூறியிருக்கிறார்.