தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்: கர்நாடாகாவில் RRR படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு.. காரணம் என்ன.?

Author: Rajesh
23 March 2022, 5:21 pm

பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இந்த திரைப்படம் வரும் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
மேலும் இந்த படத்தில், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்திலும் இந்த படம் வெளியாகவுள்ளது.

ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்க உலக ரசிகர்களே ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கர்நாடக ரசிகர்கள் அந்த படத்தை கர்நாடகாவில் ஒரு திரையரங்குகளில் கூட வெளியிடக் கூடாது என்றும், படத்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும் #BoycottRRRinKarnataka என்ற ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது திடீரென இப்படியொரு எதிர்ப்பு கிளம்ப என்ன காரணம் என்பதற்கும் தெளிவாக விளக்கம் கொடுத்து விளாசி வருகின்றனர் அம்மாநில இளைஞர்கள்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் கன்னட மொழியில் உருவாகாதது தான் இந்த எதிர்ப்புக்கு காரணம் என்கின்றனர். கன்னட மொழியை புறக்கணித்து விட்டு பான் இந்தியா படமென ராஜமெளலி பிரச்சாரம் செய்வதால் கன்னடர்கள் இந்த படத்திற்கு எதிரான எதிர்ப்பு குரலை கொடுத்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டு இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 1560

    0

    0